சென்னையில் இன்று அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மேகக் கூட்டங்கள் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னைக்கு இனி அதி கன மழைக்கான வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
பிரதீப் ஜான் கணிப்பு - மழைக்கு வாய்ப்பு குறைவு
தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதி கன மழை இல்லையென்றாலும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்துக்கொண்டிருக்கும் என்றும் காலை 10 மணி வரை கன மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.