Chennai : சென்னையில் இன்று இரவு 10 மணி முல் 20ஆம் தேதி காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


மழைநீர் வடிகால் பணி


சென்னையில் பல்வேறு மண்டலங்களில் 244 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சீதாம்மல் காலனி, தியாகராய நகர், ஹபிபுல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, அசோக் நகர், மாம்பலம், விருகம்பாக்கம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


போக்குவரத்து மாற்றம்


இந்நிலையில், மழைநீர் வடிகால் கட்டுமான பணி காரணமாக ஈ.வெ.ரா சாலையில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ”கோயம்பேடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில், சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் பாயின்ட் மற்றும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்புக்கு இடையில்) நெடுஞ்சாலை துறையினர் இன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி குறுக்கே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே, இன்று இரவு 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லாம். ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் தாச பிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மீண்டும் வலது புறம் திரும்பி நாயர் பாலம் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதற்கிடையில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமணலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க


Petrol, Diesel Price: இன்றோடு 301வது நாள்..விலையில் மாற்றமே இல்லாமல் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!