தீபாவளிப் பண்டிகை என்றாலே பொது மக்கள் ஆஃபரில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், துணி மணிகள் ஆகியவை வாங்க சென்னையின் வர்த்தக நகரமாக உள்ள தி. நகருக்கு பொது மக்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள். இதனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகர போக்குவரத்து காவல துறை போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த போக்குவரத்து விதி மாற்றம் என்பது தி. நகருக்கு மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அக்டோபர் மாதம் எட்டாம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை (08/10/2022 - 24/10/2022) அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அறிவுறுத்தப்பட்டிருப்பதாவது,
தீபாவளி பண்டிகையைபொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்கபொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிளுக்கு வருகை தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொது மக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.
1.தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது. தியாகராய மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும் ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருத்தும். வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும். வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும். பிருந்தாவன் சந்திப்பிலிருத்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருத்தும் பணகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.
2. சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 07 மணி வரை தி நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.
3. ஏற்கனேவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ண மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபாணி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வளங்களை நிறுத்திக் கொள்ளலாம். பொது மக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்கு தக்க ஒத்துழைப்பை நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.