சென்னை புறநகா் ரயில் சேவையில் இன்று மாற்றம்... இந்த வழித்தடத்தில் போறீங்களா... அப்போ படிங்க!

சென்னை, தாம்பரம் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது.

Continues below advertisement
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் மற்றும் தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் 75க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள்.
 
சென்னை, தாம்பரம் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார்போல் பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X 
 
இன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம், கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டு   இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 11.00, 11.30, பிற்பகல் 12.20, 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒரு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு புறப்படும். மற்றொரு ரயில் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு புறப்படும்.
 
 
 சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அதற்கேற்றார்போல் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

Continues below advertisement