சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்தில் இருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 


முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 


கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக 2020-ல் சென்னையில் மொத்தம் 52 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வந்தன. அப்போது, ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 79 ஆம்புலன்ஸ்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. 


இதில் அடிப்படை உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 53 ஆம்புலன்ஸ்கள், மேம்படுத்தப்பட்ட, நவீன உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 10 ஆம்புலன்ஸ்கள், 3 நியோ நேட்டல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 13 பைக் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 


இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்டத் திட்ட மேலாளர் சந்தீப் குமார் கூறும்போது, ’’108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது.




சராசரி பயண நேரம் குறைந்ததற்கு, ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், ஹாட்ஸ்பாட்களின் அருகிலோ அல்லது ஹாட்ஸ்பாட்டிலேயோ ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்ததும் முக்கியக் காரணங்கள் ஆகும்’’ என்று தெரிவித்தார்.


இதுகுறித்து மேலும் பேசிய அவர், ’’சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு சேவையைத் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ், 8,66,978 பேருக்கு உதவி உள்ளது. இதில் சாலை விபத்துக்கு உள்ளான மக்கள் மற்றும் கர்ப்பணிப் பெண்கள் ஆகியோரே அதிக பலன் அடைந்தோராவார். கொரோனா காலத்தில் காய்ச்சல் மற்றும் கோவிட் 19 பாதிப்புக்கு உள்ளானோருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அதேபோல பிற அவசர காலப் பிரச்சினைகளான இதயப் பிரச்சினை, சுவாசப் பிரச்சினை, பக்கவாதம், விஷம் குடித்தல் உள்ளிட்டவற்றுக்காக,  108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மருத்துவமனைக்குச் சென்றனர். 


108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ உதவி மூலம், பயணிக்கு உடனடியாகத் தேவைப்படும் முதலுதவி எந்தத் தாமதமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கும் வகையில், ஆம்புலன்ஸில் உள்ள மொபைல் மூலம் நோயாளியின் அறிகுறிகள் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படுகின்றன’’ என்று 108 ஆம்புலன்ஸ் மாவட்டத் திட்ட மேலாளர் சந்தீப் குமார் தெரிவித்தார்.