சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல்

Continues below advertisement

சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் எம்.கே.பி. நகர், 16 - வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது , அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனை செய்து, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஃபராபி காஸி ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Continues below advertisement

விசாரணையில் இவ்வழக்கில் தொடர்புடைய நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஃபராபி காஸி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

புளியந்தோப்பு பகுதியில் சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த 8 நபர்கள் கைது. 110  உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர், புளியந்தோப்பு சாஸ்திரி நகர், 13 - வது தெருவில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 8 நபர்களை விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.அதன் பேரில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த சுகுனேஷ் ( வயது 23 ) , சூர்யா ( வயது 23 ) , எடிசன் ( வயது 25 ) , சிவலிங்கம் ( வயது 21 ) , பரத் ( வயது 25 ) , கார்த்திக் ( வயது 22 ) , அரவிந்த் ( வயது 25 ) , P.பரத் ( வயது 20 ) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 110 எண்ணிக்கைகள் கொண்ட Tydol உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ கஞ்சா மற்றும் 5 சிரிஞ்சுகள் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ஏற்கனவே சுகுனேஷ் மீது 6 குற்ற வழக்குகளும், சூர்யா மீது 3 குற்ற வழக்குகளும், சிவலிங்கம் மீது 1 வழக்கும் மற்றும் கார்த்திக் மீது 4 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.