சென்னையில் பல நாள்களுக்குப் பிறகு இன்று 24 டிகிரி வெப்பநிலை பதிவானதோடு, பனிப்பொழிவும் சாரல் மழையும் காணப்பட்ட நிலையில், ட்விட்டரில் ‘சென்னை ஸ்நோ’ எனும் ஹாஷ் டாக்கை ட்ரெண்ட் செய்து நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.


தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 20 கி.மீ வேகத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக  சென்னையில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.


முன்னதாக இன்று குறைந்த பட்ச வானிலை 22 - 23 டிகிரி செல்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


 






இந்நிலையில் ட்விட்டர்வாசிகள் தொடங்கி தமிழ்நாடு சிஎஸ்கே அணியின் அதிகாரப்ப்பூர்வ பக்கம், வெதர்மேன் பிரதீப் ஜான் வரை பலரும் #ChennaiSnow எனும் ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து அதகளம் செய்து வருகின்றனர்.


 






சென்னை லண்டன் போல் இருப்பதாகவும், பெங்களூருவை விடக் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் ஒருபுறம் ட்ரெண்ட் செய்வதோடு மறுபுறம் சென்னையில் பனியில் உறைந்து கிடப்பது போன்ற மீம்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள் கிச்சு கிச்சு மூட்டி வருகின்றனர்.


 






 






இன்னொரு புறம், 24 டிகிரியை உறைபனி என அழைக்கும் சென்னைவாசிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து வட இந்திய மாநிலத்தவர்கள் மீம்ஸ் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.


பனிப்பொழிவு மழையாக மாறுமா?


காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நவ.22 காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது