சென்னையில்  இன்று மாலை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. 


இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்ததாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 11 ஆம் தேதி வரை,  தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.