சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ,ராயப்பேட்டை உள்ளிடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பலரும், தங்களது ட்விட்டர் பதிவில் சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவுத்துள்ளது.
23 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு. வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27.09.2022 மற்றும் 28.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RMC Chennai (imd.gov.in) வானிலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.