Chennai Power Cut:  


சென்னையில் இன்று (டிசம்பர் 8 2022) தாம்பரம், ஆவடி, ஐடி காரிடர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.  இந்நிலையில், சென்னையில் இன்று தாம்பரம், ஆவடி மற்றும் ஐடி காரிடர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.


தாம்பரம்


தாம்பரம்  பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 கடப்பேரி பகுதிக்குட்பட்ட ஆர்பி ரோடு, வேல்முருகன்  தெரு, வினோபோஜி நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


ஐடி காரிடர்


ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் இன்று மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சிறுசேரி நாவலூர் சிப்காட், புதுப்பாக்கம், ஈகத்தூர், ஓஎம்ஆர், சிப்காட் சிறுசேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


ஆவடி


அலமதி கோவிந்தபுரம், வெண்மணிநகர், பால்பண்ணை சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:


தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


TN Rain Alert: உருவானது மாண்டஸ் புயல்: ஏற்றப்பட்டது எச்சரிக்கை கூண்டுகள்! எந்தெந்த பகுதிகள் ஜாக்கிரதை...?