Chennai Powercut: சென்னையில் இன்று (நவம்பர் 15) இந்த இடங்களில் பவர்கட்.. லிஸ்ட் இதோ

Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!

Continues below advertisement

Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!

Continues below advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (நவம்பர் 15) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.  அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். 

பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை

பொன்னேரி

அனுப்பம்பட்டு, தாம்பெரும்பாக்கம், ஏ.ஆர்.பாலவ்ம் அரசூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் மாம்பாக்கம் 

சிப்காட் இண்டஸ்ட்ரியல், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் மின்தடை

அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்துக்குட்ட குழித்துறை மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல்   பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெற உள்ளதால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, பணகுடி பகுதிக்குட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப வனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் சுற்றுயுள்ள கிராமங்கள். களக்காடு பகுதிக்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

மேலும், குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முஞ்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம்,

விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, சென்னித்தோட்டம், மாமூட்டுக்கடை, விரிகோடு, கொல்லஞ்சி, சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவினை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோட, வாவறை, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை  மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Continues below advertisement