சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
எனவே, 16, 17 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக, தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையின் ஓரங்களில், இருந்த கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும் வழியாத மழை நீரில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் வீட்டில் உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
தொடர்ந்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தண்ணீர் வடியாத காரணத்தினால், இன்று காஞ்சிபுரம் மாங்காடு பகுதியில், இருந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதி வீட்டிற்குள் நுழைந்த தண்ணீர் கூட மூன்று நாட்களாக, வெளியேறாமல் இருப்பதால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
IPL 2023 Retention LIVE: பொல்லார்டை தக்க வைக்குமாறு மும்பை?
வடகிழக்கு பருவமழை தமிழக முழுவதும் கனமழை பெய்து புரட்டி எடுத்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எடுக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிந்து செல்கின்றன. மேலும் நீர் இருப்பு தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகறல் மற்றும் வெங்கசேரி இடையே செல்லும் செய்யாற்றில் தடுப்பணையை தாண்டி 3500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கின்றன. புதிய பாலம் அமைக்கப்பட்டு வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தில் அடியில் நீர் வேகமாக செல்வதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.