Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது. 

Continues below advertisement

சென்னையில் நாளை மின்தடை: 18.06.2025

இந்நிலையில், நாளை(18.06.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை (18.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மாடம்பாக்கம்: நத்தஞ்சேரி, மேகலா நகர், வேங்கை வாசல், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர்.

கோவிலம்பாக்கம்: குரோம்பேட்டை சாலை, அருள் முருகானந்தவனம் நகர், பல்லவ கார்டன், நன்மங்கலம்

பல்லவரம் கிழக்கு: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

பெருங்களத்தூர்: ஸ்ரீ ராம் பிராபர்டீஸ் அபார்ட்மெண்ட்ஸ், காமராஜர் நகர், அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, விஜயலட்சுமி தெரு, VOC தெரு, கட்டபொம்மன் தெரு, காந்தி சாலை, பாரதி தெரு, ராஜீவ் காந்தி தெரு, ஜிஎஸ்டி சாலை மற்றும் பகுதி

சிட்லபாக்கம் Judge காலனி: ராமகிருஷ்ணா புரம் முழுப் பகுதி, வால்முகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை மற்றும் வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி.

நேரு நகர்: ராமகிருஷ்ணா நகர் அனைத்து தெருக்கள், சர்மா நகர், சொக்கநாதர் தெரு மற்றும் மாணிக்கவாசகர் தெரு.

மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்கு முன் முடிவடைந்தால் மின்  விநியோகம் வழங்கப்ப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை  முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.