Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 17.05.2025
இந்நிலையில், நாளை(12.02.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை (17.05.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
சென்னீர்குப்பம்: கண்ணபாளையம், பாரிவாக்கம், ஆயில்ச்சேரி, பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி, பனவேடுதோட்டம்.
ராமாபுரம்: ராயலா நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், பாரதி சாலை, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பாரதி நகர், திருமலை நகர், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், முகலிவாக்கம் பகுதி, சுபஸ்ரீ நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், கிருஷ்ணா நகர், கோமாட்சி நகர், ஏஜிஎஸ் காலனி , ஆஷ்ரமம் அவென்யூ ஆகிய இடங்கள்
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்கு முன் முடிவடைந்தால் மின் விநியோகம் வழங்கப்ப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.