சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Continues below advertisement

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அலமதி:

Continues below advertisement

கொடுவள்ளி , மாகரல் , கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்.

பட்டாபிராம்:

ஆவடி செக்போஸ்ட் , என்.எம் ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜ புரம், நேரு பஜார்.

திருமுல்லைவாயல்:

தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4-வது தெரு, அம்பேத்கர் நகர்.

ஆவடி:

காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.

மாங்காடு:

ஆவடி ரோடு , மகிழம் அவென்யூ , பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயக நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் ரோடு.

எழும்பூர்:

எழும்பூர் ஹை ரோடு, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கேப்பு ரோடு, ஜெகதமம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்.

பாந்தியன் சாலை:

மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேண்ட், பழைய ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு.