புதிய வரி விகித மாற்றத்தின் மூலம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி பெறுவோர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வருமான வரி விகித படிநிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய வரி விகிதத்தில் எவ்வளவு வரி விதிக்கப்பட்டது , தற்போதைய புதிய வரி விகிப்பில் எவ்வளவு வரி விகிப்பு என்பது குறித்து பார்ப்போம்.
வருமான வரி:
வருமான வரி என்பது ஒரு நேரடி வரி முறையாகும். இது ஒரு முற்போக்கான அடுக்கு விகிதத்தைப் ( progressive tax ) பின்பற்றுகிறது, அங்கு வரி செலுத்துபவரின் வருமானம் உயரும் போது வரி விகிதம் அதிகரிக்கிறது என்பதாகவும். வருமான வரிச் சட்டம், 1961ன்படி, இந்தியாவில், வருமான வரியில் இரண்டு வரி விதிகங்கள் பின்பற்றப்படுகின்றன.பழைய வரிவிகித முறை , பல்வேறு விலக்குகள் மற்றும் விலக்குகளை அனுமதிக்கிறது என்றும் புதிய வரிவிகித முறை, விதிவிலக்குகள் இல்லாமல் குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
பட்ஜெட் 2025-26 அறிவிப்பு:
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் , புதிய வரிவிகித முறையில் மாற்றங்களை கொண்டுவரப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, புதிய வரிவிகித முறையில், முந்தைய பட்ஜெட்டில் 7 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, நடுத்தர குடும்பங்களுக்கு, பெறும் ஆதாயத்தை ஏற்படுத்தும் என நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இந்த தருணத்தில் , தற்போதய பட்ஜெட் புதிய வரி விகிப்பு முறை விகிதங்கள் ( 2025 ); கடந்த பட்ஜெட் புதிய வரி விகிப்பு முறை விகிதங்கள் எவ்வளவு இருக்கிறது , எவ்வளவு இருந்தது என்பது பார்ப்போம்.
இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ( 2025-26 ) வரி விகித மாற்றங்கள்:
( New Tax Regime )
இந்த முறையில் அடிப்படை வரி விகிதம் ரூ.4 லட்சமாக இருந்தாலும், ரூ.12 லட்சம் வரையில் வருமானத்திற்கு விலக்கு ( ஐடிஆர் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் ) அளிக்கப்பட்டுள்ளது. மேலும் , புதிய வரி விகிப்பில் ரூ. 70, 000 வரை நிலையான கழிவாக (Standard Deduction ) பெற்றுக் கொள்ளலாம் என்றும் வரி விகித திரும்ப பெறுவதில் ( Tax Rebate ) ரூ. 60, 000 உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது
கடந்த பட்ஜெட்டில் ( 2024-25 ) வரி விகிப்பு முறை ( New Tax Regime )
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ( 2024-25 ), இந்த முறையில் அடிப்படை வரி விகிதம் ரூ.3 லட்சமாக இருந்தாலும், ரூ.7 லட்சம் வரையில் வருமானத்திற்கு , விலக்கு ( ஐடிஆர் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் ) அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: Gold Price Today : பட்ஜெட் எதிரொலி! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்க விலை..
பழைய வரி விகிப்பு முறை: ( Old Tax Regime )
தற்போது , பழைய வரி விகிப்பு முறையில், மாற்றங்கள் கொண்டு வந்தாலும், பழைய வரி விகிதங்களில் மாற்றம் இல்லாமலேயே தொடர்கிறது . பழைய வரி விகிப்பு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாம், விருப்பத்திற்கு ஏற்ப புதிய வரிவிகித முறையையோ, அல்லது பழைய வரி விகித முறையையோ தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஒரு முறை புதிய வரி விகித முறையே தேர்வு செய்துவிட்டால், பழைய வரி விகிப்பு முறைக்கு மாற முடியாது.