Chennai Power Cut: சென்னையில், நாளை பிப்ரவரி 1ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 01.02.2025
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:
முழு ராம் என்ஜிஆர் தெற்கு வடக்கு, முழு குபேரன் என்ஜிஆர் எக்ஸ்ட் பகுதி, முழு ஷீலா என்ஜிஆர், முழு எல்ஐசி என்ஜிஆர், முழு ராமலிங்கம் என்ஜிஆர் / சிவப்பிரகாசம் என்ஜிஆர், முழு பிருந்தாவன் என்ஜிஆர், முழு சதாசிவம் என்ஜிஆர், முழு மகாலட்சுமி என்ஜிஆர், கார்த்தி.
சென்னை தெற்கு மின் தடை பகுதிகள்:-
முழு அனகாபுத்தூர் பகுதி, முழு பொழிச்சலூர் பகுதி மற்றும் முழு பம்மல் பகுதி,
சென்னை மேற்கு மின் தடை பகுதிகள்:-
அண்ணா நகர் C,F,H பிளாக், TP சத்திரம், RV நகர், சாந்தி காலனி, அண்ணா நகர் வடக்கு.
Also Read: 3வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 மாவட்டங்களுக்கான தவெக நிர்வாகிகள் லிஸ்ட்
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.