Chennai Power Shutdown (06.06.2025): மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில்  தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து  வருகிறது. சென்னையில்  மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள்  மின் தடை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் நாளை மின்தடை: 06.06.2025

இந்நிலையில், நாளை(06.06.2025 ) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை 06.06.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

முகப்பேர்:

ஜீவன் பீமா நகர், ரேடியல்ஹவுஸ், டிவிஎஸ் அவென்யூ, டிவிஎஸ் காலனி மற்றும் சென்னை பொதுப் பள்ளி

சிட்லபாக்கம்:

வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, ராமகிருஷ்ணாபுரம் முழுப் பகுதி, சுபாஷ் சந்திர போஸ் சாலை, தங்கல்கரை, ஈஸ்வரி நகர், ஆர்த்தி நகர், வால்முகி தெரு, காமராஜர் தெரு, மணிமேகலை தெரு, விஜிஎன் நகர், சுப்ரம்

சென்னையில் மின்தடை நேரம்?

இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின்  விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை  முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.