பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாட்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவ மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.   அந்த வகையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 


ஆவடி பகுதி மின் நிறுத்தம் எங்கெங்கே ?


பட்டாபிராம், கண்ணப்ப பாளையம், ஐயப்பன் நகர், ராமாபுரம், திருமுல்லைவாயில், சோழம்பேடு, மாகறல், அலமதி, கொடுவள்ளி, காரனை மற்றும் அம்மணம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்பட உள்ளன.


பல்லாவரம் பகுதி மின் நிறுத்தம் எங்கெங்கே ?


கடப்பேரி,மூவேந்தர் தெரு ,பிள்ளையார் கோவில் தெரு  உள்ளிட்ட பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்பட உள்ளன.


கிண்டி பகுதி மின் நிறுத்தம் எங்கெங்கே ?


ஆதம்பாக்கம், மகாலட்சுமிநகர் ,100 அடி சாலை ,உள்ளகரம் ,பாலையா காட்டன் உள்ளிட்ட பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்பட உள்ளன.


வேளச்சேரி பகுதி மின் நிறுத்தம் எங்கெங்கே ?


தண்டீஸ்வரம், 1-வது தெரு முதல் 10 வது, குறுக்கு தெரு வரை, தண்டீஸ்வரம் 1 வது அவன்யூ முதல் 5 வது அவன்யூ வரை 


மயிலாப்பூர் பகுதியில் மின் நிறுத்தம் ?


சாந்தோம், டுமின் குப்பம், மந்தவெளி சாலை, திருவள்ளுவர் பேட்டை, ஐந்தாவது குறுக்கு தெரு, டிமாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது


அம்பத்தூர் பகுதியில் எங்கு எங்கு மின் நிறுத்தம் ?


கள்ளிகுப்பம் புதூர், பானு நகர், செங்குன்றம் சாலை, பஜனை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்பட உள்ளன.