Chennai Power Shutdown: சென்னையில், பிப்ரவரி 21ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும். 


சென்னையில் நாளை மின்தடை: 21-02-2025


இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதனால், சென்னையில் நாளை ( பிப்.21 ) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது


Also Read: விஜய்க்கு Y பாதுகாப்பா! எனக்குலாம் தேவையில்லை; நான்தான் நாட்டுக்கே பாதுகாப்பு- சீமான்


மின்தடை செய்யப்படும் இடங்கள்: பிப்.21 ( வெள்ளி ) 


அண்ணாநகர் மேற்கு, திருவள்ளீஸ்வரர் நகர்


அண்ணாநகர் மேற்கு மற்றும் மேற்கு விரிவாக்க பகுதி முழுவதும், திருவள்ளீஸ்வரர் நகர், திருமங்கலம், என்.வி.என் நகர், CPWD குவார்ட்டர்ஸ், B,C&D செக்டர், 11 முதல் 20வது மெயின் ரோடு, எமரால்டு குடியிருப்புகள், மெட்ரோ மண்டல குடியிருப்புகள்.