Chennai Power Cut: சென்னை மாநகராட்சியில், மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை, பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , மாநகராட்சியானது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் , எதிர்காலத்தில் நிகழாமல் சரி செய்யப்படும்.  இந்நிலையில், எந்த இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம். 

Continues below advertisement

சென்னையில் மின்தடை

இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது  இருக்காது.

Continues below advertisement

மின்தடை பகுதிகள்:

அலமதி துணை மின் நிலையம்:

கீழ்கொண்டையூர், அரக்கம் கிராமம், கர்லப்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், போண்டேஸ்வரம் கிராமம், கரனை கிராமம், புதுக்குப்பம் கிராமம். பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளுமே

Also Read: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆப்பிளுடன் இணையும் ஏர்டெல்..ஆப்பிள் டிவி+ கண்டு மகிழலாம்.!

மின் பராமரிப்பு பணி:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் ( மார்ச்.8 ) சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் வரும் செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது. 

இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்