சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, வரும் திங்கட்கிழமை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 28-ம் தேதி, அதாவது வரும் திங்கட்கிழமை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் ஹை ரோடு, கிருஷ்ணமா சாலை, பிரகதம்பாள் தெரு, கோடம்பாக்கம் ஹை ரோடு, வாலஸ் கார்டன், ரட்லாண்ட் கேட் 1 முதல் 4-வது தெருக்கள், கதீட்ரல் கார்டன் சாலை, திருவீதியான் தெரு, மாடல் ஸ்கூல் சாலை, அஜீஸ் முல்க் 1-வது முதல் 5-வது தெரு, நுங்கம்பாக்கம் ஹை ரோடு 4-வது லேன், அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, முருகேசன் நாயக்கர் காம்ப்லெக்ஸ், ஜி.என். செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, ஷாபி முகமது சாலை, ஜெய்ப்பூர் நகர், லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வெஸ்ட் எண்ட் தெரு, கோபாலபுரம் பகுதி, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி நகர் 1 முதல் 6 தெருக்கள், சுந்தரம் அவென்யூ, ஜிஏ கான் தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.