சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி

பூந்தமல்லி பேரூராட்சி, சென்னீர்குப்பம், கரையாஞ்சாவடி, துளசிதாஸ் நகர், சின்னமாங்காடு, குமணஞ்சாவடி.

நீலாங்கரை

பழைய கணேஷ் நகர் மெயின் ரோடு 5-வது தெரு முதல் 11-வது தெரு வரை, ஸ்ரீ கற்பக விநாயகர் நகர், மகாத்மா காந்தி நகர், ராமலிங்க நகர், கோபிநாத் அவென்யூ, நாராயணா நகர், திருவள்ளுவர் நகர், பாரதி தெரு, காமராஜர் தெரு, செந்தாமரை கண்ணன் நகர், ராஜேந்திரா நகர் 11-வது  தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவான்கேணி மெயின் ரோடு.

அடையாறு

சாஸ்திரி நகர் எல்.பி. ரோடு, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ. 

அம்பத்தூர்

மேனாம்பேடு, கல்லிக்குப்பம், பானு நகர், புதூர், சந்திரசேகரபுரம், ஒரகடம், கருக்கு, ரெட்ஹில்ஸ் ரோடு.

செம்பியம்

எம்எச் சாலை, காமராஜ் சாலை, மூலக்கடை, காந்தி நகர் 1 முதல் 5-வது  தெரு, ஜமாபுலி தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.