Chennai Power Shutdown: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை (06.09.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

Continues below advertisement

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

போரூர்:

லட்சுமி அவென்யூ, முகலிவாக்கம் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர், எல்&டி நகர், மாதா நகர்.

Continues below advertisement

அண்ணாசாலை:

டிவி ஸ்டேஷன், டிரிப்ளிகேன், PWD வளாகம்,பிரசிடென்சி கல்லூரி, பெரிய தெரு, சிடோஜி தெரு, TH சாலை, ஐயாப்பிள்ளை தெரு, அக்பர் சாஹிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் எம்டி தெரு, பெல்ஸ் சாலை, CNK சாலை மற்றும் லேன், எம்டி அப்துல்லா தெரு மற்றும் லேன், வெங்கடேசன் தெரு, வால்லா பல்கலைக்கழக வளாகம், ஆறுமுகம் தெரு, ஆறுமுகம் தெரு. சாலை, மியான்சாஹிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு & சந்து, அருணாச்சல ஆச்சாரி தெரு, டைபூன் அலிகான் தெரு, யூசுப் லப்பை தெரு, மற்றும் லேன், அப்துல் கரீம் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாகிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, குப்புமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், வல்லப அக்ரஹாரம் புலிப்போன் பஜார்.

தில்லை கங்கா நகர்:

மகாலட்சுமி தெரு, முருகன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, அமராவதி அவென்யூ, ஜேக்கப் தெரு, ஜெகநாதன் தெரு, சீனிவாசன் தெரு, ஓயோ தெரு, நேதாஜி தெரு, மணிமேகலை தெரு, கண்ணகி தெரு, பள்ளி தெரு, நாகப்பா பிளாட்ஸ், அருள் ஜோதி தெரு, அண்ணாமலை தெரு, குமரன் தெரு, பத்மாவதி தெரு, புழு, மத்தவத்தி தெரு.

திருவான்மியூர்:

இந்திரா நகர் 1வது, 2வது அவென்யூ மற்றும் 4வது, 9வது முதல் 12வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, வெங்கடரத்தினம் நகர், ஐஸ்வர்யா காலனி, மற்றும் சிஎஸ் காலனி.

கிண்டி:

சரஸ்வதி நகர், கல்கி நகர், புவனேஸ்வரி நகர், விநாயகபுரம், சொக்கலிங்கம் நகர், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 10வது மெயின் ரோடு, ஆண்டாள் நகர் 2வது, 3வது மெயின் ரோடு, சங்கத் அடுக்குமாடி குடியிருப்புகள், மல்லேஷ் அடுக்குமாடி குடியிருப்புகள், எஸ்டெல் ஹோம்ஸ், டிஆர்ஏ சல்மா அபார்ட்மெண்ட், டிஆர்ஏ ரெடிங்டன்.

பஞ்செட்டி:

அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் ரோடு, ஜெகநாதபுரம் ரோடு, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே.கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி.பார்ம், மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.

பொன்னேரி: வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு,பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் கனகம்பாக்கம்.

அண்ணா நகர்:

சாந்தி காலனி, AA முதல் AM வரையிலான தொகுதிகள், பழைய L, Y, Z தொகுதி, 7வது பிரதான சாலை, TNHB குடியிருப்புகள் A, B, W தொகுதி, 2வது முதல் 6வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1வது முதல் 3வது பிரதான சாலை, வெஸ்ட் கிளப் சாலை, அமிஞ்சிக்கரை, PP கார்டன், MM காலனி, NSK நகர், மற்றும் NM சாலை.