Chennai Power Shutdown: சென்னை வாசிகளே.. மோட்டர் போட்டு வச்சுக்கோங்க! நாளை(04.02.2025) இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

Chennai Power Shutdown (4.2.2025): சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக சின்மயா நகர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது. 

Continues below advertisement

சென்னையில் நாளை மின்தடை: 04.02.2025

இந்நிலையில், நாளை(04.02.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...

சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:

பராமரிப்புப் பணிகளுக்காக, செவ்வாய்க்கிழமை (04.02.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சின்மயா நகர்:  சாய் நகர், காளியம்மன் கோயில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர், சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல் மற்றும் டி காலனி, சிஆர்ஆர் புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்ரா தெரு, இளங்கோ நகர் தெற்கு, பாலாம்பால் நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மென்ட், கிருஷ்ணா நகர் 4 வது   தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி 1 முதல் 3 பகுதி, பிஏ காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி.

புழல்:  சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் ரோடு, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி.

பி ஓரூர் :  வயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ரெநகர் 5 வது  தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா  1  முதல் 7 வது  அவென்யூ, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜ ராஜேஸ்வர் நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.

காட்டுப்பாக்கம் : அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் பகுதி. 

செம்பியம்:  காவேரி சாலை 1 முதல்  8 வது  தெரு, தொண்டியார்பேட்டை உயர் சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், ஜிஎன்டி சாலை, காந்தி நகர், பிபி சாலை, மாதவர்ம் பகுதி.  

பல்லாவரம்:  பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகாந்த புரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் பகுதி, தர்கா சாலை, பல்லவ கார்டன், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், ஆபிசஎஸ் லேன் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்கு முன் முடிவடைந்தால் மின்  விநியோகம் வழங்கப்ப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை  முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola