Chennai Power Cut:  

Continues below advertisement


சென்னையில் நாளை (நவம்பர்5,2022) தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.  இந்நிலையில், சென்னையில் நாளை தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.


தாம்பரம்


தாம்பரம்  பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சித்தலப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜர் தெரு, தனலெட்சுமி நகர், திருவள்ளூவர் நகர், கணபதி காலனி, பல்லாவரம் பஜனை கோயில் தெரு,ராஜாஜி நகர், பல்லாவரம் தர்கா சாலை, பச்சையப்பன் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


அடையாறு:


வேளச்சேரி பை-பாஸ் சாலை (எக்ஸிலண்ட் மருத்துவமனை முதல் ஜி.ஆர்.டி. வரை), மெட்டு தெரு, நட்டூர் தெரு, இராஜலெட்சுமி தெரு முழுவதும், ராஜ்பவன் ரசாவித் ஹோட்டல், சங்கீதா ஹோட்டல், திரு.வி.க. தெரு, அபில் தர்மலிங்கம் தெரு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின் தடை ஏற்படும்.