சென்னையில் நவம்பர் 28ம் தேதி தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 28 ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 29ம் தேதி போரூர், அம்பத்தூர் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?
சென்னையில் இன்று (26.11.22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர் பெரம்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.
தாம்பரம் அடுத்த அகநானூறு தெரு, கடப்பேரி எம்.ஐ.டி, ராதா நகர், நேரு நகர், நல்லப்பா தெரு, பட்டேல் தெரு, ராஜாஜி தெரு, ஆனந்த நிலையம், ஆர்.பி.ரோடு, பழைய அஸ்தினாபுரம் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.
அதேபோல், தரமணி கே.பி.கே.நகர், நேரு நகர் அனைத்து லிங்க் ரோடு, ரமணியாம் அப்பார்ட்மென்ட்ஸ் பகுதிகளிலும், பெரம்பூர் பகுதியான சிட்கோ நகர் மோகன் ரெட்டி மருத்துவமனை, எம்பார் நாயுடு தெரு, எம்.டி.எச் ரோடு (பகுதி) புழல் விநாயகபுரம் முழுவதும், காஞ்சி நகர், செங்குன்றம் நெடுஞ்சாலை மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஐடிசி ஹோட்டல், ஜி.பி. ரோடு, ஈ.பி. லிங்க் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ, டிரான்ஸ்கோ பில்டிங், மதுரா வங்கி, ராணி மேனியம்மை ஹாஸ்டல் & திருமண மண்டபம், மான்டியத் ரோடு, தாஜ் ஹோட்டல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருக்கிறது.
பூந்தமல்லி ஜெ.ஜெ.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூ, விஜிபி லே அவுட், விமலா கார்டன், பெரியார் தெரு, டிவிஎஸ் அவென்யூ, அக்கரை கிராமம், குணால் தோட்டம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், வேளச்சேரி ராஜ்பவன், அண்ணா கார்டன், காந்தி சாலை, ராஜலட்சுமி நகர், அய்யா பிளாட், 6வது தெரு தண்டீஸ்வரன் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் காலை 9 மணிமுதல் 2 மணிவரை தடை செய்யப்பட இருக்கிறது.
நாளை மின் தடை:
நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் கிராமப்புற கோட்டத்துக்கு உட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (27.11.22) புதிய மின்பாதை விரிவாக்க பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இதன் காரணமாக கங்கைகொண்டான் துணைமின் நிலையத்திலிருந்து வரும் சிப்காட் மற்றும் தொழிற்சாலை வழித்தடத்தில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு சிப்காட், கங்கைகொண்டான் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.