சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(28.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 28-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IT காரிடார்
எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் மற்றும் இணைப்பு, ராமப்பா நகர், சிபிஐ காலனி, ராஜீவ் நகர் வேளச்சேரி மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.
ராமாபுரம்
மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கேஸ்ட்டில், டி.வி.எஸ். எமரால்டு.
மேடவாக்கம்
படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1 முதல் 7-வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.
வளசரவாக்கம்
விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.
நொளம்பூர்
எஸ்&பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1 முதல் 8-வது, கம்பர் சாலை, கவி மணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ, எம்சிகே லே-அவுட், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், பனஞ்சோலை தெரு, மாதா கோயில் பகுதி, பெருமாள் கோயில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.
ஆதம்பாக்கம்
நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.
தாம்பரம்
செம்பாக்கம், ரங்கா காலனி, எஸ்பி காலனி, நேதாஜி தெரு, ஆர்பி அவென்யூ 1 முதல் 5-வது, பவானந்தியார் தெரு, வேணுகோபால் சாமி நகர், பாரதிதாசன் தெரு, மாருதி நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
