சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(25.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 25-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநீர்மலை

தேரடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, விஜிஎன் மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டுத் தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் ரோடு, காந்தி தெரு.

Continues below advertisement

ஐயப்பன்தாங்கல்

பிரின்ஸ் ஹைலேண்ட் அடுக்குமாடி குடியிருப்பு, துலிவ் தக்ஷின் அடுக்குமாடி குடியிருப்பு, சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்ரமணி நகர், கருமாரி அம்மன் நகர்.

திருமுடிவாக்கம்

எம்.கே.பி நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டாசியோவா தொழில்துறை பூங்கா.

அண்ணாசாலை

கதவு எண் 15 முதல் 24 பூத பெருமாள் தெரு, ஒயிட்ஸ் ரோடு, கதவு எண் 756 முதல் 760 அண்ணாசாலை, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யூ, ஆனந்த விகடன், கதவு எண் 106 to120, அண்ணாசாலை, ரஹேஜா டவர் (HT), கதவு எண் 40 முதல் 68 ஜிபி சாலை, சத்தியமூர்த்தி பவன், கதவு எண் 1 முதல் 7 கிளப் ஹவுஸ் சாலை, பட்டுலால்ஸ் சாலை, கதவு எண் 148 முதல் 152 அண்ணாசாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ எஸ்டேட், கதவு எண் 799, கலைக் கல்லூரி, ஈபி இணைப்பு சாலை, கதவு எண் 2 முதல் 29 மற்றும் 22 முதல் 78 வி.சி சாலை, இந்தியன் வங்கி, கதவு எண் 29, ஹோட்டல் காஞ்சி, கதவு எண் 4, ரயில்வே கட்டிடம், எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை விடுதி மற்றும் திருமண மண்டபம், கதவு எண் 766 முதல் 770A அண்ணாசாலை, ஏர் இந்தியா, கதவு எண் 21, 64, 122 முதல் 125 மார்ஷல் சாலை, கதவு எண் 7 மான்டீத் லேன், கதவு எண் 47 எல் & டி, மான்டீத் சாலை, கனரா வங்கி (HT), கன்னிமாரா ஹோட்டல் (HT), ஐஓபி வங்கி (HT), தாஜ் ஹோட்டல் (HT), கதவு எண் 11 முதல் 14, 19 முதல் 22, வுட்ஸ் சாலை, பிஆர்(BR) வளாகம்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.