சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(24.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 24-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம்

  • கீழ்கட்டளை
  • பாலமுருகன் நகர்
  • அம்பாள் நகர்
  • தேன்மொழி நகர்
  • பூபதி நகர்
  • சௌந்தரராஜன் நகர்
  • குமரன் நகர்
  • திருவள்ளுவர் நகர்
  • கீழ்கட்டளை பேருந்து நிலையம்
  • இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர்
  • 200 அடி ரேடியல் சாலை
  • ரோஸ் நகர்
  • எம்.கே நகர்
  • கணபதி நகர்
  • ஈச்சங்காடு சிக்னல்
  • பொறியாளர்கள் அவென்யூ
  • பாக்கியலட்சுமி நகர்
  • ராஜா நகர்
  • எஸ். கொளத்தூர்
  • மணிகண்டன் நகர்
  • வீரமணி நகர்
  • அன்பு நகர்
  • சுய உதவி தொழிற்சாலைகள்

செம்பியம்

  • சந்திரபிரபு காலனி
  • தணிகாசலம் நகர்
  • மூலக்கடை
  • அன்னை சத்யா நகர்
  • வெங்கடேஸ்வரா நகர்
  • போலீஸ் குடியிருப்பு
  • மாதவரம் உயர் சாலை
  • கே.எச் ரோடு
  • நாகையா தோட்டம்
  • முனுசாமி தெரு
  • பாளையக்கார தெரு
  • யுனைடெட் இந்தியா நகர்
  • கே.கே நகர்
  • செட்டி தோட்டம்

Continues below advertisement

எண்ணூர்

  • கத்திவாக்கம்
  • எண்ணூர் பஜார்
  • காட்டுக்குப்பம்
  • நேரு நகர்
  • சாஸ்திரி நகர்
  • அண்ணாநகர்
  • சிவன்படை வீதி
  • வள்ளுவர் நகர்
  • காமராஜர் நகர்
  • எஸ்விஎம் நகர்
  • வ.உ.சி நகர்
  • உலகநாதபுரம்
  • முகத்துவாரக்குப்பம்
  • எண்ணூர்குப்பம்
  • தாழங்குப்பம்
  • நெட்டுக்குப்பம்
  • சின்னக்குப்பம்
  • பெரியகுப்பம்
  • எர்ணாவூர்குப்பம்
  • ETPS வாரிய குடியிருப்புப் பகுதி
  • எர்ணாவூர்
  • பாலாஜி நகர்
  • மகாலட்சுமி நகர்
  • ஜெய்ஹிந்த் நகர்
  • முருகப்பா நகர்
  • சரஸ்வதி நகர்
  • மதுரா நகர்
  • சுப்ரமணிய நகர்
  • பொன்னியம்மன் நகர்
  • ஜோதி நகர்
  • ராமநாதபுரம்
  • சக்தி கணபதி நகர்
  • சண்முகபுரம்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.