பொதுமக்களுக்கு மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க சென்னையில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு காரணமாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நாளில் சிறு சிறு பழுது நீக்குதல், மின் கம்பிகள் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மின்தடையால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (19-11-2026) அதாவது வியாழக் கிழமை சென்னையில் காலை 10 முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும். அவை எந்தெந்த இடங்கள் என்பதை பார்க்கலாம்.
கே.கே.நகர்
காந்தி நகர், சஞ்சய் காந்தி நகர், இளங்கோ நகர், இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்.ஜி.ஆர். தெரு, சாதிக் பாஷா நகர், ஏரிக்கரை தெரு, தபால் தணிக்கை காலனி, சாய் நகர், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் விரிவாக்கம், பாஸ்கர் காலனி, வேதா நகர், முனியப்பா நகர், திருவள்ளியம்மை அவென்யூ நகர், மல்லியம்மாள் அவென்யூ நகர். நெற்குன்றம் மெயின் ரோடு, சித்திரை தெரு, வைகாசி தெரு, பங்குனி தெரு, மாசி தெரு, நடேசன் நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, சக்தி நகர், சாய்பாபா காலனி, காளி அம்மன் கோயில் தெரு, எல்&டி காலனி, ரத்னா நகர், ஸ்வர்ணாம்பிகை நகர், வெங்கடேஷ் நகர், கர்மராஜர் தெரு தெரு, சாய் நகர், பாரதி தெரு, ஸ்ரீ அய்யா நகர்
பாலவாக்கம்
பி.ஆர்.எஸ்.நகர், பாரதிதாசன் தெரு, பாரதி நகர், அம்பேத்கர் தெரு, பள்ளித் தெரு, வைத்தியர் தெரு, மா.பொ.சி. தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, வி.ஓ.சி தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வெம்புளியம்மன் தெரு, வெம்புளிஅம்மன் தெரு அவென்யூ, ஜெயசங்கர் நகர், வைகோ சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது
மின்தடை அறிவிக்கப்பட்ட நேரத்திற்குச் சற்று முன்பிலிருந்தே அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை ஏற்பட்டதும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, கம்ப்யூட்டர் போன்ற அதிக மின்சாரம் இழுக்கும் சாதனங்களின் சுவிட்சுகளை அணைத்து, பிளக்குகளைப் பிடுங்கி வைக்க வேண்டும். மீண்டும் மின்சாரம் வரும்போது ஏற்படும் உயர் மின்னழுத்தத்தால் சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது.
