சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 17-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடையாறு
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகன்நாதபுரம், திரௌபதியம்மன் கோவில், காந்தி தெரு, டான்சி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.
பம்மல்
கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர் 2-வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17 முதல் 27-வது தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு.
தரமணி
காமராஜ் அவென்யூ 1-வது , 2-வது தெரு, 3-வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கேனால் பேங்க் ரோடு, ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, 4 முதல் 8-வது மெயின் ரோடு, கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர் 6-வது குறுக்கு தெரு முதல 15-வது குறுக்குத் தெரு வரை.
செம்பியம்
எம்.எச்.ரோடு, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தல் 1 முதல் 4-தெரு, எஸ்.எஸ்.வி கோயில் 1 முதல் 3-வது தெரு, என்.எஸ்.கே.தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6-வது தெரு, நரசிம்மரெட்டி நகர் 1 முதல் 4-வது தெரு, மணலி ஹை ரோடு, பள்ளி சாலை.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.