சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(13.08.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 13-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.கே.நகர்

  • காவேரி ரங்கன் நகர்
  • கே.கே.சாலை
  • லோகையா காலனி
  • தசரதபுரம்
  • ஆற்காடு சாலை
  • பாலாஜி நகர்
  • பாஸ்கர் காலனி
  • மதியழகன் நகர்
  • அருணாச்சலம் சாலை
  • குமரன் காலனி
  • காந்தி நகர்
  • தேவராஜ் நகர்
  • எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை
  • பரணி காலனி
  • காவேரி மருத்துவமனை தெரு
  • சூரியா தெரு
  • 80 அடி காலை
  • எம்ஜி சக்கரபாணி தெரு
  • பிக் பஜார்
  • பாஸ்போர்ட் அலுவலகம்
  • என்எஸ்கே லேன்
  • ஷாமலா டவர்
  • முனுசாமி தெரு
  • கஸ்தூரி தெரு
  • விநாயகம் தெரு
  • காமராஜர் சாலை
  • வெங்கடேசா நகர்

பாலவாக்கம்

  • காமராஜர் சாலை மெயின் ரோடு
  • கரீம் நகர்
  • மகாத்மா காந்தி நகர்
  • சங்கம் காலனி 1-வது மற்றும் 2-வது தெருக்கள்
  • கந்தசாமி நகர் 1 முதல் 7-வது தெருக்கள்
  • மணியம்மை தெரு
  • திருவான்மியூர் அவ்வை நகர்
  • வெங்கடேசபுரம்
  • கண்ணப்பன் நகர்
  • பாரதி நகர்

பல்லாவரம்

  • பம்மல் மெயின் ரோடு
  • ஆட்டுத்தொட்டி
  • கிருஷ்ணா நகர்
  • முத்தமிழ் நகர்
  • என்எஸ்கே தெரு
  • நடராஜன் தெரு
  • பிருந்தாவன் காலனி
  • கென்னடி தெரு
  • மூங்கைலேரி

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement