சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, வெள்ளிக்கிழமையான நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 8-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. சென்னை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 அல்லது மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின்போது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி கோட்டம்
- தெருவை கண்டிகை மற்றும் சிப்காட்
- கரடிப்புத்தூர்
- அமரம்பீடு
- தாணிப்பூண்டி
- பாஞ்சாலை
- வாணிமல்லி
- பெரியபுலியூர்
- கோபால்ரெட்டி கண்டிகை
- என்.எம்.கண்டிகை
- கன்னங்கோட்டை
- பூதூர்
- சிறிய மற்றும் பெரிய பொம்மதிகுளம்.
கொரட்டூர்
- கொரட்டூர் வடக்கு
- சீனிவாசபுரம்
- என்ஆர்எஸ் சாலை
- மேட்டுத் தெரு
- பெருமாள் கோயில் தெரு
- பல்லா தெரு
- லேக் வியூ கார்டன்
- டிவிஎஸ் நகர்
- சந்தோஷ் நகர்
- அன்னை நகர்
- அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங்
- லட்சுமி புரம்
- ஐயப்பா நகர்
- செந்தில் நகர் 1 முதல் 17-வது தெரு
- தில்லை நகர்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.