சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 6-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அலமதி

கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கதவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வண்ணியன் சத்திரம், அயிலச்சேரி, குருவாயில், பூச்சிஅத்திபேடு, கொடுவள்ளி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, வேல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.

ஜே.ஜே.நகர்

முகப்பேர் ஏரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு 1 முதல் 12 பிளாக்குகள், கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, சர்ச் ரோடு, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.

கோவூர்

தண்டலம், ஆகாஷ் நகர், சர்வீஸ் ரோடு, தாரப்பாக்கம், செயின்ட் ஜோஸ்ப் கல்லூரி, ஆதிலட்சுமி நகர், மேனகா நகர்.

திருவான்மியூர்

ரங்கநாதபுரம், கொட்டிவாக்கம், பெருங்குடி, வால்மீகி நகர், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா, பாலவாக்கம், திருவள்ளுவர் நகர், எல்பி ரோடு, கண்ணப்பா நகர், கால்வாய் சாலை, காமராஜர் நகர், கிழக்கு மற்றும் மேற்கு பிடிசி காலனி, சிபிடி, CMWSSB, அபய் நகர், தெற்கு அவென்யூ, இசிஆர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.