சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 29-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மேனாம்பேடு

  • கிருஷ்ணாபுரம்
  • விநாயகபுரம்
  • ரெட் ஹில்ஸ் ரோடு
  • மேனாம்பேடு
  • பிஆர்ஆர் நகர்
  • திருமலைப்பிரியா நகர்

கோவிலம்பாக்கம்

  • ஓம் சக்தி நகர்
  • சத்யா நகர்
  • சுபீஷா அவென்யூ
  • சுசீலா நகர்
  • பிஎம்டி நகர்
  • வடக்குப்பட்டு மெயின் ரோடு
  • பெரியார் நகர்
  • திருவேங்கடம் நகர்
  • தர்மபூபதி நகர்
  • திருவள்ளூர் தெரு
  • நவீன்ஸ் பிஎச்இஎல் நகர்
  • இணைப்பு சாலை

பள்ளிக்கரணை

  • காமகோடி நகர் (பகுதி)
  • ஐஐடி காலனி (பகுதி)
  • நாகம்மாள் அவென்யூ
  • விஜிபி ராஜேஷ் நகர் (பகுதி)
  • மாபோசி நகர் (பகுதி)

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.