சென்னை, அஸ்தினாபுரத்தில் இன்று கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.


சென்னை, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், திருமலை நகர் முதல் மெயின் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை வர்ஷா, இன்று மாலை கடத்தப்பட்டார். தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை வர்ஷாவை அவ்வழியே வந்த ஆட்டோவில் சென்ற அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்றுள்ளார்.


முன்னதாக சிகப்பு நிற சட்டை அணிந்திருந்த ஆட்டோ ஓட்டுநர் குழந்தையை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


தொடர்ந்து மாலை முதல் காவல் துறையினர் அனைத்து ஆட்டோக்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஆட்டோ சென்னை சிட்டி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமி வர்ஷாவை குரோம்பேட்டை அருகே காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.





தொடர்ந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஷம்சுதீன் எனும் 34 வயது ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.