சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு இருந்த பெண்ணிடம் அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர்  சென்று விசாரித்த போது மேற்கு வங்கத்தை சார்ந்த அந்த இளம்பெண் தன்னை தன் கணவரின் நண்பர் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அது குறித்து வழக்கு பதியுமாறு குரோம்பேட்டை காவல்நிலையத்தை அணுகிய போது வழக்கை ஏற்க மறுத்து வெளியே அனுப்பிவிட்டதாக அழுது கொண்டே அந்த பெண் கூறினார்.



இதை கேட்ட சமூக ஆர்வலர் குரோம்பேட்டை  காவல் நிலையத்தை அணுகிய போது உடனடியாக அந்த பெண்ணின் கணவனை அழைத்து கொண்டு காவலர்கள் கணவன் மற்றும்  நண்பனை  வீட்டிற்கு சென்று அழைத்து வந்து மூன்று பேரையும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிந்து. மொழி பெயர்பாளர் உதவியுடன் நடைபெற்ற விசாரணையில் , தபரோக் உசைன் (28) பீர்பூம் மாவட்டம் மேற்கு வங்கம் காலித் ஹசன் (24) பீர்பூம் மாவட்டம் மேற்க்கு வங்த்தை சார்ந்தவர்கள். இரண்டு பேரும் குரோம்பேட்டை பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.



 

மேற்கு வங்கம் பிர்பூம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பெண் என்பதும் தெரியவந்தது தபேரக் உசேன் ஏற்கனவே திருமணம் ஆனவர். இரண்டாவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த  15 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து சென்னை அழைத்து வந்து இருவரும் தனியே வசித்து வந்த நிலையில் அவர்களின் பக்கத்து வீட்டில் நண்பனான காலித் ஹசன் தங்கியுள்ளான்.



 இன்நிலையில் நண்பனின் மனைவி மீது ஈர்ப்பு கொண்ட காலித் சிறுமி குளிப்பதை மறைத்து வைத்த செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு சம்பவத்தன்று, தனிமையில் இருந்த நண்பனின் மனைவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் மூன்று பேரையும் செங்கல்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 வயது பெண்ணை காப்பகத்திற்கும். தபரோக் ஊசைன் மற்றும் காலித் ஹசன் ஆகிய இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.