இண்டர்நெட், மொபைல் போன்ற வசதிகள் மிக மிக இலகுவாக எல்லோர் கையிலும் சென்றடைந்து வாழ்கை தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. எல்லோர் கையிலும் இணையத்துடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன் எளிதாக சென்று சேர்ந்துள்ளது. கிராமங்களில் கூட, பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள் தவிர மற்ற அனைவர் கையிலும் உள்ளது. இது நம் வாழ்வை வேகமாக மற்றியதுடன் பல வேலைகள் செய்வதை குறைத்துள்ளது. இதன் மூலம் பலருக்கும் பல நன்மைகள் கிடைக்கும் அதே வேளையில், இதன் மூலம் சில தீங்குகளும் நடைபெறுவது கண்டிப்பாக நடைபெறும். ஆனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் அவற்றில் சிக்காமல் நிச்சயம் தவிர்க்க முடியும்.



சென்னை மக்களுக்கு எச்சரிக்கை


ஒவ்வொரு மூலை முடுக்கிலும், இந்த நாட்களில் பல சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன, அதில் பலர் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் இருந்து மக்களை காக்க அந்தந்த அரசாங்கம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்பவர்கள் குறித்து பொதுமக்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியன் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) என்று கூறி சிலர் ஸ்பேம் மெசேஜ்களை மக்களுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Stuart Broad: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள்.. லெஜண்டரி பந்துவீச்சாளர்..! 37 வயதில் ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்..


பான் கார்டு மோசடி


அவர்கள் அந்த மெசேஜில் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிப்பதாக கூறி ஒரு லிங்கை அனுப்புவர்களாம். அப்படி மோசடி செய்பவர்கள் அனுப்பும் எந்த இணைப்பையும் (பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்க) கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த இணைப்பை கிளிக் செய்தால், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக அணுகி, அதிலுள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.



சைபர் கிரைம் ஏடிஜிபி அறிவுறுத்தல்


கணக்கு எண், வாடிக்கையாளர் ஐடி, மொபைல் எண், DOB விவரங்கள், பான் கார்டு எண் மற்றும் ஆதார் அட்டை எண் போன்ற தகவல்களை அந்த போலி மோசடி லிங்க் கேட்கும் என்று காவல்துறை கூறியுள்ளது. சஞ்சய் குமார், ஏடிஜிபி (சைபர் குற்றங்கள்), மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் ஸ்பேம் லிங்க்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தொலைபேசி அழைப்புகள் அல்லது மெசேஜ் போன்றவற்றில் தங்கள் OTP-களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.