காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னையின் புறநகர் பகுதி என்பதாலும் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அதிக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. 

ரவுடிகள் அட்டகாசம்:


இதன் காரணமாக தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிக்கும் சமூக விரோத கும்பல்களும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் சமூகவிரோத கும்பல்களை ஒடுக்குவதற்காக பல்வேறு, நடவடிக்கை எடுத்துக் கொண்டு வந்தாலும் ரவுடிகள் மற்றும் குட்டி ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகிவருகிறது

 

சமீபத்தில் கூட தொழில் போட்டி ரவுடிசம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களை செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வரும் குள்ளா  என்கிற விஷ்வாவை போலீசார் கைது செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்

 

என்கவுண்டர்:


 

விஷ்வா மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி ஆள் கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோக்கண்டி என்ற பகுதியில், விஷ்வாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி முயற்சி செய்த பொழுது விஷ்வாவை போலீசார் சுட்டு கொலை செய்தனர்.

 

சுட்டு கொலை செய்யப்பட்ட விஷ்வா, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றிய தலைவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியாக உள்ள கூடுவாஞ்சேரியில் இரண்டு ரவுடிகள் சுட்டு கொலை செய்யப்பட்டு நிலையில், சென்னை புறநகர் பகுதியில் மற்றொரு ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.