சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் தனக்கு கிடைத்த தங்க நகையை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டலம் 3ல் 26ஆவது பிரிவில் சஞ்சீவ் குமார் என்பவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வழக்கம் போல் வீடுவீடாக சென்று குப்பைகளை வாங்கியுள்ளார். அப்போது ஒரு வீட்டில் இருந்த குப்பையில் 9 சவரன் தங்க சங்கிலி இருப்பதை பார்த்துள்ளார். அந்த தங்க சங்கிலியை உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த தங்க சங்கிலி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சஞ்சீவ் குமாரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். குறிப்பாக அந்த பகுதியின் மாநகராட்சி இணை ஆணையராக உள்ள சிவகுருபிரபாகரன் அவரை பாராட்டியுள்ளர்.
மேலும் சஞ்சீவ் குமாரின் செயல் குறித்து சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவிற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இவர்களை நேர்மையான பணியாளர் கிடைப்பது அரிது என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி...! யார் இந்த ஆசியம்மாள்...?