திருவள்ளூரை அடுத்த பூண்டியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திருவள்ளூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடை பயணமாக சென்றார்.




அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ- மாணவிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.


அந்த நேரத்தில் பூண்டியில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து அங்கு வந்து நின்றது. அதில் மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். அப்போது மாணவர்கள் பயணம் செய்த பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பயணம் செய்தனர்.





ஆரம்ப சுகாதார நிலையம் வரை சிறிது தூரம் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேருந்தில் பயணித்த மாணவ-மாணவிகளுக்கு பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.


முன்னதாக தங்களது கிராமங்களுக்கு பள்ளிக்கூடம் வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இது போன்று பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஆபத்தான நிலையில் மாணவ மாணவியர்கள் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினர் இதில் கவனம் செலுத்தி மினி பேருந்துகள் கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அனைத்து கோரிக்கைகளும் விரைவாக நிறைவேற்றி தருவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்




இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன்  தெரிவிக்கையில், திருவள்ளூர் தொகுதி பூண்டி ஒன்றியத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று  திரும்பிய தருணத்தில்  பள்ளி முடித்துவீடு திரும்பும் மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தது கண்டு பேருந்தை நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பாக பேருந்தில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர