தமிழ்நாட்டிற்கு அதிக மழையை தரக்கூடிய வட கிழக்கு பருவமழை, கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 


சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து:


சென்னை மாநகரிலும், கடந்த இரண்டு நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடசென்னை பகுதி ஜீவா ரயில்வே நிலையம் அருகே உள்ள சுரங்க பாதயில் மாநகர பேருந்து ஒன்று சிக்கியது. அப்போது பேருந்தினுள் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்


இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மழை காலங்களில் எப்பொழுதும், இச்சுரங்கப்பாதையில் நீர் தேங்கிவிடுகிறது. இந்நிலையில், நேற்று முதல் பெய்த தொடர் மழையால், இச்சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது. காலையில் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர். இருப்பினும் தொடர் மழையால் மீண்டும் நீர் தேங்கியுள்ளது.






பொதுமக்கள் கோரிக்கை:


எனவே, நிரந்தரமாக, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்வதற்கு ஏற்ப மேம்பாலம் அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதையடுத்து, சில மணி நேரங்களில் பேருந்து மீட்கப்பட்டது.


சுரங்கப்பாதை மூடல்:


இந்நிலையில், கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னயில் 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


அம்பேகர் கல்லூரி சாலை, பெரம்பலூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம்  சுரங்கப்பாதை  வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Also Read: மழையில் மக்களை காப்பாற்ற இதையெல்லாம் செய்யுங்க: அதிகாரிகளிடம் லிஸ்ட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்