தமிழ்நாடு நாள் தினத்தன்று  நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் விவரம்:


 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி  தான் நமக்கு  தமிழ்நாடு நாள்.  இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும்,  தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 





 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம்.

 





அது தான்  தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள்  அநீதிகளை எதிர்கொள்வதற்கும்,  தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும்  காரணமாகும்.  நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.





தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று  நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான்  சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன்  கொண்டாட அரசு முன்வர வேண்டும். 

 

இவ்வாறு அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.