சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் வசதி மூலம் பெறப்படும் டிக்கெட் சர்வரில் கோளாறு ஏற்ப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதனால் பயணிகள் அனைவரும் கவுண்டர் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு. 


சென்னை மெட்ரோ: 


சென்னை மக்களின் பொது போக்குவரத்தில் முக்கிய அங்கமாக விளங்கும் மெட்ரோ ரயில் அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மக்கள் மெட்ரோ ரயிலையே நம்பி உள்ளனர். 


இதையும் படிங்க: TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை


ஆன்லைன் டிக்கெட் கோளாறு:


இந்த நிலையில்  இன்று காலை திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முயற்சி செய்த போது, அவர்களால் ஆன்லைன் மூலம் மெட்ரோ டிக்கெட் பெற முடியாமல்  சிரமத்திற்க்கு ஆளாகினர், இதனால் பயணிகள் சிலர் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இது குறித்து தகவல் கொடுத்தனர்.


மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்:


இதனை உடனடியாக கவனித்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ஆன்லைன் மூலம் டிக்கெட் ஏன் பெற முடியவில்லை என்கிற காரணத்தை விளக்கி விரைவில் இந்த கோளாறு சரி செய்யப்படும் என்று தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது.. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கல்களால், பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. CMRL ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது. மேலும் தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 






பயணிகள் அவதி: 


ஆன்லைன் சர்வர் கோளாறு காரணமாக காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அவதியுற்று வருகின்றனர். 


சரியான சர்வர்:


இதன் பின்னர் மெட்ரொ ரயில் நிர்வாகத்தின் தொழில்நுட்ப குழுவினர், இந்த கோளாறை செய்தனர். 






இது குறித்து தகவல் தெரிவித்த மெட்ரோ ரயில் நிர்வாகம், ஆன்லைன் சர்வர் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளன. சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டுகள், மொபைல் க்யூஆர் உள்ளிட்ட அனைத்து டிக்கெட் முறைகளும் வழக்கம் போல் இயங்குகின்றன. CMRL ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.