பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது, மின்கம்பியில் தீப்பற்றியதால், சோதனை ஓட்டமானது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 

Continues below advertisement

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ:

சென்னை புறநகர் பகுதியில் , 2 ஆம் கட்ட மெட்ரோ பணியானது நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி மற்றும் போரூர் இடையில் நடைபெற்று வரும்  நிலையில், மெட்ரோ கட்டுமான பணியானது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மெட்ரோ கட்டுமான பணி நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று இப்பகுதிக்கு இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. 

Continues below advertisement

                           படம் : மின் கம்பியில் தீப்பற்றிய காட்சி:

சோதனை ஓட்டம் நிறுத்தம்:

ஆனால், இப்பகுதியில் திடீரென மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆட்கள் இல்லாத மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் இயக்கிய போது, சுமார் 2 கி.மீ தொலைவில் தீ பற்றிய நிகழ்வானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், உடனடியாக இப்பகுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமானது இயக்கமானது நிறுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்பகுதியில் மின்சார கம்பியில் என்ன பிரச்னை என்பதை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில் புறநகர் பகுதியான பூந்தமல்லி மற்றும் சென்னை மெரினா கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

Also Read: ஹைப்பர்லூப் ரயில் ரெம்பா ஸ்பீடா இருக்கும்! சென்னை ஐஐடி_க்கு நிதி ஒதுக்கீடு- ரயில்வே அமைச்சகம் அப்டேட்

சென்னை 2ம் கட்டம் மெட்ரோ:

ஏற்கனவே, குமணஞ்சாவடி மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையிலான 1.2 கி.மீ நீளமுள்ள பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனைக்கு இடையிலான பாதையில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், இன்று மாலை பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2.5 கி.மீ பகுதியில் சோதனை ஓட்டமானது நடைபெற திட்டமிடப்பட்டது. அப்போது, ரயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்கம்பியில் தீப்பற்றியது. உடனே மெட்ரோ நிர்வாகம் சோதனை ஓட்டத்தை நிறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உடனடியாக , மின் கம்பியில் ஏற்பட்ட பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டு , மீண்டும் விரைவியில் சோதனை ஓட்டமானது நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன.