Chennai Metro: சென்னை மெட்ரோ! கொளத்தூர் - OMR.. டிராஃபிக்கில் சிக்க வேண்டாம்! இனி ஈசியாக போகலாம்..

Chennai Metro Phase 2 Extension: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டம் பணிகளானது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெற்று வருகிறது

Continues below advertisement

Chennai Metro Rail Phase 2 Extension: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Continues below advertisement

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் : 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டம் பணிகளானது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தாமதமான பணிகள்:

இரண்டாம் கட்டம் மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது: மாதவரம் முதல் சிப்காட் (வழித்தடம் 3), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி (வழித்தடம் 4), மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (வழித்தடம் 5). வழித்தடங்கள் 3 மற்றும் 4 இல் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வழித்தடம் 5 இன் சுரங்கப்பாதை  ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமானது.

கொளத்தூரில் இந்த மாதம் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கும் என்றும், 'குறிஞ்சி' என்ற சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாக ஏற்கெனவே மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: Dharmendra Pradhan: இதை எதிர்த்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு; மத்திய கல்வி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை! 

தொடங்கிய பணிகள்:

இந்த நிலையில் 5வது வழித்தடத்தின்  7.8 கி.மீ நிலத்தடி சுரங்கப்பாதை பணிகள் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 'குறிஞ்சி' என்ற சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தின் (TBM) , இது சுரங்கும் தொடங்கும் பணியானது கொளத்தூர் தொடங்கியுள்ளது.  முதற்கட்டமாக 246 மீட்டர் சுரங்கப்பாதையை தோண்டி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டமாக  ஸ்ரீனிவாச நகர் (1.06 கி.மீ) நோக்கி சுரங்கப்பாதையில் மீண்டும் தோண்டும் பணியானது மீண்டும் தொடங்கும். இரண்டாவது துளையிடும் கருவியானட் முல்லை மார்ச் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் (603 மீ) நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொளத்தூர் முதல் நாதமுனி  வரையிலான ஐந்து சுரங்கப்பாதை ரயில் நிலையங்களுடன் 7.8 கி.மீ நீளத்துடன்  டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது, 

தென் சென்னைக்கு சுலபமாக போகலாம்:

இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தென் சென்னை  பகுதிகளான மயிலாப்பூர்,  அடையாறு போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும், பழைய மகாபலிபுரம் சாலையான (OMR) உள்ள IT வழித்தடத்துடனும் நேரடியாக இணைக்கும். வில்லிவாக்கம் மூன்று மெட்ரோ நிமையங்களில் அதிக பயனடையும் என்றும் இதனால் அந்த பகுதிகளில்  பயண நேரத்தைக் குறைக்கிறது. 

Continues below advertisement