ஒரு நகரம் வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதி என்பது முக்கிய பங்காற்றிய வருகிறது. குறிப்பாக மெட்ரோ போக்குவரத்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல உதவியாக இருப்பதால், ஒரு நகரம் வேகமாக முடியற மெட்ரோ சேவை மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது.

சென்னை மெட்ரோ

அந்த வகையில் தற்போது சென்னையில் முதற்கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரை, நான்காவது வழித்தடம், ஒரு வழித்தடமாக மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்

கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதியாக மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. அதேபோன்று பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால வழிப்பாதையாக மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. இதேபோன்று சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று கோடம்பாக்கத்தில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து வழித்தடங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, இரட்டை அடுக்குப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நான்கு ரயில்கள் இயக்கம் வகையில் இந்த இரட்டை அடுக்குப்பாதை வழித்தடம் அமைய உள்ளது. 

கலங்கரை விளக்கம், பூந்தமல்லி, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ்

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 26 கிலோமீட்டர் தூரமெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதில் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில், 22 மீட்டர் அகலத்திலும், 140 மீட்டர் நீளத்திலும் மேம்பால மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை உள்ள வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டாம் கட்ட மெட்ரோ அமைக்கும் பணி சுமார் 63,000 கோடி மதிப்பீட்டில் சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மற்றும் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமையவுள்ளது. 

எப்போது பயன்பாட்டிற்கு வருகிறது?

அந்த வகையில் கோடம்பாக்கம் வரை செல்லக்கூடிய வழித்தடம், அமைக்கும் பணி தொடங்கப்பட்டு வேகம் எடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி எந்தவித தடங்களும் இல்லாமல் பணிகள் முடிவடைந்தால், 2026 ஜூலை மாதத்திற்குள் மெட்ரோ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடம் என்பது சென்னை மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.