சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15 ம் தேதிக்குள் சொத்துவரி கட்டினால் 5% சதவீதம் சலுகை வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “2 ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும், 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ. 1.240 கோடி வரி வசூலாகியிருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்குள் சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகிறது. 2022- 23 ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்கள் விதிக்கப்படும் 2 சதவீத அபராத தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதேபோல், அக்டோபர் 15 ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத சென்னை மக்கள் இந்த ஆண்டு மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, கடந்த வாரம் பேசிய மேயர் பிரியா ராஜன், “மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. வரும் 10-ந் தேதிக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் என பதிலளித்தார்.
தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரி செலுத்த போதிய கால அவகாசம் வழங்கியபோதிலும், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீத தனி வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு செய்து அனுமதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 3 லட்சத்து 10 ஆயிரத்து 139 கட்டிடங்கள் மாறுபாடு உள்ள கட்டிடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு கலைஞர் கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்ட வேண்டும்.
சாலைகளில் உயர்த்தப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1,550ல் இருந்து ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்படும்