சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சென்னை மேயர் பிரியா ரிப்பன் மாளிகையில் சானிட்டரி நாப்கின்களை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 மேல்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 113 அடிப்படைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகளில் 25,474 பெண் குழந்தைகளுக்கு ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,
நிர்பயா நிதியின் கீழ் சென்னைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா அவர்கள் 13.12.2022 தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் நிர்பயா நிதியின் கீழ் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் (13.12.2022) தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளில் பயிலும் 25,474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.
சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
மேலும், மாணவிகளின் பள்ளிகளில் அவசரத் தேவைகளுக்காக கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 50 சானிட்டரி நாப்கின்கள் என்ற முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும். ஒரு வருடத்திற்கு 26.59 இலட்சம் சானிட்டரின் நாப்கின்கள் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.